வெள்ளி, 13 நவம்பர், 2015

13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வந்தால் கெட்ட சகுனமா?

13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வந்தால் அது ஒரு தீயசக்தி படைத்த நாளாக உலக மக்களால் கருதப்படுகிறது.
அதாவது இந்த நாளில், வீட்டை விட்டு வெளியில் செல்லாதிருப்பது, புதிய தொழில்
தொடங்காதிருப்பது அதுமட்டுமன்றி, இந்நாளில் இங்கிலாந்தில் எவ்வித வணிகமும் நடைபெறாது, மேலும் பல ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கு என்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் காலங்காலமாக கருதப்பட்டு வருகிறது.
13 ஆம் திகதி அன்று வெள்ளிக்கிழமை வந்தாலே, அது அபசகுணமாக கருதப்படுவதால், அமெரிக்காவில் வசித்து வரும் முன்னால் விமானப்படை அதிகாரியான பிரிஜ் பூஷண் விஜ் என்பவர் புதிய காலண்டர் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
இந்த காலண்டர் குறித்து அவர் கூறியதாவது, 1970 ஆண்டில் நான் விமானப்படையில் பணியாற்றியபோது, உணவு இடைவேளையின்போது நண்பர்களுடன் பல விடயங்களை பகிர்ந்துகொள்ளுவோம்.
அப்படி ஒருமுறை, 13ம் திகதி வெள்ளிக்கிழமை அமைவது பற்றி எங்களுக்குள் பேசினோம். அப்பொழுதில் இருந்து, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று தீர்மானித்தேன்.
இதன்படி, யூலை 31 ஆம் திகதி என் காலண்டரில் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பிப்ரவரி 29ம் திகதி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், பிப்ரவரி 29ல் பிறந்தவர்கள் கூட என் காலண்டர் மூலம் பிறந்த நாள் கொண்டாட முடியும்.
என் காலண்டர் கிரிகோரியன் முறையில் இருந்து மாற்றப்படவில்லை. இந்த ஒரு நாள் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், திங்கட்கிழமையில் இருந்து என் காலண்டர் தொடங்குகிறது, இதனால், 13ல் வெள்ளி என்பதே வராது என்று கூறியுள்ளார்.
இவரது காலண்டனர் 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய சாதனை புத்தகமான லிம்காவில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.